50 இடங்களில் கத்தி குத்து, பெண் காவல் அதிகாரி கூட்டு வன்கொடுமை..! டெல்லி அதிர்ச்சி

டெல்லி சங்கம் விஹார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் 21 வயதான ஷபானா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி பணிக்கு சென்ற ஷாபனா வீடு திரும்பவில்லை.

பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதனால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தொடர்ந்து மகளை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால்

மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றும் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன ஷபானா பரிதாபாத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார் விசாராணியிலும், பிரேத பரிசோதனை அறிக்கையிலும் வெளியான தகவல் ஒட்டுமொத்த இந்தியாவை அதிர வைத்துள்ளது. சம்பவம் நடந்த அன்று ஷபானாவை பணியில் இருந்த நிலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்தியுள்ளது.

பின்னர் ஷபானவை அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து உடலில் சுமார் 50 இடங்களில் குத்தி கிழித்துள்ளனர். மேலும், அவரின் மார்பகங்களை கத்தியால் அறுத்து கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு ஷபானாவுடன் பணியில் இருந்த பெண் காவலரும் உடந்தை என்றும் ஆங்கில பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் ஷபானாவின் இத்தகைய கோர சம்பவத்துக்கு நீதி வேண்டும் என்று டெல்லியில் உள்ள பொதுமக்களும், இஸ்லாமியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Contact Us