பைபிள் வசனங்கள் தெரியததால் இளைஞன் மேற்கொண்ட கொடூர செயல்!

 

அமெரிக்காவில் பைபிள் வசனங்கள், சரியாக தெரியாததால் சிறுவனை, உயிருடன் பனியில் புதைத்த வழக்கில் இளைஞருக்கு 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் என்ற பகுதியில் வசிக்கும் 17 வயது இளைஞருக்கு இந்த வழக்கில் 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் புகாரின்படி, Ethan Hauschultz என்று சிறுவன், 13 பைபிள் வசனங்களை சரியாக மனப்பாடம் செய்யத் தவறியதால் கொடூரமாக தண்டிக்கப்பட்டுள்ளார்.

அதாவது கடந்த 2018-ம் வருடத்தில், 14 வயதுடைய Damian Hauschultz என்ற சிறுவனிடம் அவரின் தந்தை, Ethan Hauschultz-ஐ கடுமையாக தண்டிக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.

இதனால், Damian Hauschultz, சிறுவனை கடுமையாக துன்புறுத்தியிருக்கிறார். மேலும் 80 பவுன் அளவுடைய பனியில் சிறுவனை உயிருடன் புதைத்து அரை மணி நேரத்திற்கு அங்கே விட்டுச் சென்றுள்ளனர்.

இதனால், மூச்சுத்திணறி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அச்சிறுவனின் தலை, வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் பலமான காயங்கள் இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

மேலும், சிறுவனின் தாயார் தான், தன் மகன் பனியில் புதைந்து கிடப்பதை பார்த்திருக்கிறார். தற்போது, 17 வயது இளைஞராக இருக்கும் Damian Hauschultz-க்கு 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பத்து வருடங்களுக்கு அவரை கண்காணிப்பில் வைத்திருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Contact Us