துபாயில் உள்ள கேப்டன்…. செவிலியர்களுடன் புகைப்படம்…. அனைவரையும் கவர்ந்த பதிவு….!!

 

தமிழ் திரையுலகின் 80களில் முக்கிய நடிகராக இருந்தவர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் மனிதநேயமிக்க மனிதர் மற்றும் அனைவரும் போற்றுதலுக்குரிய சிறந்த தலைவராகவும் இருந்து வந்தார். இவரின் உடல்நலக்குறைவால் பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்தார். இதனையடுத்து அண்மையில் விஜய்காந்த் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார்.

இந்த நிலையில் விஜய்காந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் “நான் நலமாக உள்ளேன். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை எனக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர் சகோதரிகளுடன் கண்டேன்” என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது அவரின் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

 

Contact Us