காதலியை துண்டு துண்டாக வெட்டி பிளேடால் முகத்தின் தோலை அகற்றி.. போலீசில் சிக்காமல் இருக்க காதலன் செய்த கொடூரம்

 

 

சூரத் பகுதியைச் சேர்ந்த வினய் ராய் என்ற முப்பத்தி எட்டு வயது வாலிபருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதை மறைத்து பீகாரைச் சேர்ந்த சீதா பகத் என்ற 22 வயது இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இரண்டு வருடங்களாக அவரை காதலித்து வந்தபோது அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.

காதலியை துண்டு துண்டாக வெட்டி பிளேடால் முகத்தின் தோலை அகற்றி.. போலீசில் சிக்காமல் இருக்க காதலன் செய்த கொடூரம்
தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சீதா பகத் கட்டாயப் படுத்தி இருக்கிறார். இதனால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லி அவரை சூரத் அழைத்து சென்றிருக்கிறார் வினய் ராய். தினமும் ஒரு காரணம் சொல்லி திருமணம் செய்துகொள்ளாமல் தப்பித்து வந்திருக்கிறார் வினய் ராய். காலம் தாழ்த்துவதால் சந்தேகம் கொண்ட சீதாபகத், ஆத்திரம் அடைந்தார்.

இப்படித்தான் என்னை ஒருவன் காதலித்துவிட்டு ஏமாற்ற நினைத்தான். நான் அவன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்து உள்ளே தள்ளிவிட்டேன். அதுபோல் நீயும் என்னை ஏமாற்ற நினைத்தால் உன் மீதும் போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்து விட வேண்டியது தான். அப்புறம் நீ கம்பி எண்ண வேண்டியதுதான் என்று சொல்லவும் அதிர்ந்து போயிருக்கிறார் வினய் ராய்.

உன் மீது போலீசில் புகார் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் வழியை பாரு என்று சொல்லி இருக்கிறார். போலீசுக்கு போனா விசயம் வீட்டிற்கு தெரிந்துவிடும். வீட்டினருக்கு இந்த விபரம் தெரிந்தால் நிலைமை சிக்கலாகிவிடுமே என்று பதறிய வினய் ராய், உடனே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்.

இருவரும் கிளம்பி மகாராஷ்டிரா சென்றிருக்கிறார்கள். அங்கு சென்று திருமணத்திற்கு தேவையான துணிகள் எல்லாம் வாங்கி இருக்கிறார்கள். அதன்பின்னர் மாவட்டத்திலிருக்கும் ரயில் நிலையத்திற்குச் சென்று இருக்கிறார்கள். அங்கே ரயில் நிலையத்தை விட்டு கடந்து சென்று ரயில்வே தண்டவாளத்தில் நடந்து போயிருக்கிறார்கள். ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஒரு காட்டுப் பகுதிக்கு சீதாவை அழைத்து சென்றிருக்கிறார்.

காதலியை துண்டு துண்டாக வெட்டி பிளேடால் முகத்தின் தோலை அகற்றி.. போலீசில் சிக்காமல் இருக்க காதலன் செய்த கொடூரம்
திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே என்று சீதாவும் வினய் ராய் பின்னாலேயே சென்றிருக்கிறார். காட்டுப் பகுதிக்குச் சென்றதும், சீதாவின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். போலீசுக்கு அடையாளம் தெரிய கூடாது என்பதற்காக உடலை துண்டு துண்டாக வெட்டி இருக்கிறார். முகத்தை வைத்து அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதற்காக, முகத்தை பிளேடால் கிழித்து தோலை தனியே கிழித்திருக்கிறார் . அதன் பின்னரும் கற்களை எடுத்து முகத்தை சிதைத்து இருக்கிறார்.

தூரத்தில் இருந்த அடிபம்பில் கைகளை கழுவிக் கொண்டு ரத்தக்கறையை கழுவிக்கொண்டு அங்கிருந்து ரயிலில் நிலையம் வந்து சூரத் சென்றிருக்கிறார். வழக்கம்போல் சூரத்தில் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

இதற்கொடையில் கடந்த 24ம் தேதி அன்று நடந்த இந்த கொலை சம்பவத்தினை ரயில்வே தண்டவாளம் அருகே துண்டு துண்டாக உடைந்து கிடப்பதை அறிந்த போலீசார் அங்கு உடல் பாகங்களை கைப்பற்றினரி. கொலை செய்யப்பட்டவர் யார் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

ரயில்வே ஸ்டேஷன் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் வாலிபர் ஒருவருடன் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் அணிந்திருந்த ஆடையின் சடலத்தின் மேல் இருந்த ஆடையை ஒன்றாக இருந்தது என்று கண்டறிந்தனர் போலீசார். மேலும் கொலை நடந்த காட்டு பகுதியில் செல்போன் டவர்களை ஆய்வு செய்த போலீசார் கொலையாளியை செல்போனை கண்டுபிடித்தவர். இதையடுத்து அந்த வாலிபர் யார் என்பது குறித்து தேடத் தொடங்கியபோது அவர் சூரத் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரிய வந்தது

அவர் சூரத் பகுதியை சேர்ந்தவர் என்பதை தெரிந்துக் கொண்டனர். இதன்பின்னர் சூரத் போலீசாருக்கு அவர்களே விவரத்தை சொல்ல சூரத் போலீசார் விரைந்து சென்று வினை ராய் வீட்டிற்குச் சென்றனர். போலீஸ் வந்தது கண்டு திடுக்கிட்டார். தான் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்தும் போலீசில் சிக்கி விட்டோம் என்று அவர் பதறி இருக்கிறார்.

Contact Us