“ஸ்கூலில் விடுறேன்னு ,இப்படி என்னை …”பக்கத்து வீட்டுக்காரரால் எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட நிலை

 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் சஹ்னேவாலில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஒரு 30 வயதான நபர் பணி புரிகிறார் .அவர் அந்த தொழிற்சாலையிலேயே தங்கியுள்ளார் .அந்த தொழிற்சாலையில் 45 வயதான நபர் ஒருவரும் அவரோடு குடும்பத்தோடு தங்கியுள்ளார் ,அவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார் .அந்த பெண்ணின் தாய் கொரானா பரவல் காரணமாக உத்திரப்பிரதேச மாநிலத்துக்கு போய் விட்டார் .இந்நிலையில் அந்த 14 வயதான பெண் தன்னுடைய தந்தையுடன் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார் .

இந்நிலையில் அந்த நபர் தன்னுடைய மகளை அடிக்கடி அவரோடு தங்கியிருக்கும் 30 வயதான நபருடன் தன்னுடைய மகளை பள்ளியில் விட சொல்வார் .மேலும் அவர் வேலைக்கு போகும்போது அந்த பெண் மட்டும் தனியாக இருப்பார் .அப்போதெல்லாம் அந்த பக்கத்து வீட்டு வாலிபர் அந்த பெண்ணுக்கு துணையாக வருவார் .இந்நிலையில் கடந்த வாரம் ஒரு நாள் அந்த பெண் தனியாக இருக்கும்போது அந்த 30 வயதான நபர் அந்த பெண்ணன் அறைக்குள் சென்று அவரை பலாத்காரம் செய்து விட்டார் .பின்னர் இந்த விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி விட்டு சென்றார் .ஆனால் அப்பெண் தன்னுடைய தந்தை வந்ததும் அந்த பக்கத்து வீட்டு நபரால் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார் .அதை கேட்டு கொதித்த அந்த தந்தை அந்த நபர் மீது அங்குள்ள போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அவரை விசாரித்து வருகின்றனர் .

Contact Us