புளோரிடா துப்பாக்கிச்சூட்டில் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு!

 

அமெரிக்காவின் புளோரிடாவின் வடக்கு லேக்லேண்ட் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். முழு உடல் கவசம் அணிந்த ஒருவர் தாய் மற்றும் 3 மாத குழந்தை உட்பட 4 பேரை சுட்டுக் கொன்றதாக புளோரிடா மாகாண பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டினை நடத்தியவர் 33 வயதான முன்னாள் இராணுவ வீரர் என்றும் அவர் பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் ஏழு முறை சுடப்பட்ட 11 வயது சிறுமி ஒருவர் உயிர் தப்பியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Contact Us