ரொறன்ரோவில் சட்டத்தரணிகள் முன்னிலையில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

 

ரொறன்ரோவில் சட்டத்தரணிகள் அலுவலகம் ஒன்றில் பெண் ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைதாகியுள்ளார். வியாழக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில் Hicks Adams சட்டத்தரணிகள் அலுவலகத்தில் நுழைந்த ஆண்கள் இருவர் பெண் ஒருவரை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமாகியுள்ளனர்.

இதில் மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஞாயிறன்று அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மர்ம நபர்களால் தாக்குதலுக்கு இலக்காகி, பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்தவர் 29 வயதான Julia Ferguson என அடையாளம் காணப்பட்டது.

இவரை தாக்கிவிட்டு சம்பவயிடத்தில் இருந்து தப்பியவர்களில் ஒருவர் பின்னர் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். குறித்த நபர் ரொறன்ரோ பகுதியை சேர்ந்த ஒஸ்மான் ஒஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தாக்குதல்தாரிகள் இருவரும் சம்பவம் நடந்த சட்டத்தரணிகள் அலுவலகத்தை குறி வைத்துள்ளதும், ஆனால் தவறுதலாக Julia Ferguson சிக்கியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Contact Us