பிக்பாஸ் 5 ; பிரபல தொகுப்பாளினியை களமிறக்கும் விஜய் டிவி ?

 

பிக்பாஸ் 5 ஆவது சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா போட்டியாளராகக் கலந்து கொள்ளப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் கடந்துள்ள நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியின் புரொமோ மட்டும் வெளியான நிலையில், இதில் யார் யார் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பது குறித்த பெயர் பட்டியல் வெளியாகாமல் உள்ளது.

இருப்பினும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களின் பெயர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிறது.

அந்தவகையில் தொகுப்பாளினி பிரியங்கா போட்டியாளராக பிக்பாஸ் 5 ஆவது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவரைத் தவிர ’குக்கு வித் கோமாளி’ கனி, பாபா பாஸ்கர், சுனிதா, ஜான் விஜய், ஷகிலா மகள் மிலா, ஜி.பி. முத்து உள்ளிட்டோரும் பிக்பாஸ் 5 இல் கலந்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது

Contact Us