“வீட்டிலும் ,வெளியிலும் பலமுறை என்னை ….”ஒரு பாதிரியாரால் பாதித்த பெண் புலம்பல்

 

ஒரு பாதிரியார் மீது ஒரு பெண் பலாத்கார புகார் கொடுத்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டார். ஆந்திரா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சர்ச்சில் ஜோசப் என்ற சாது சின்ன வெங்கடேஷ்வர்லு என்பவர் பாதிரியாராக பணி செய்து வந்தார் .அந்த மத போதகர் ஜோசெப் திருமணமாணவர் ஆவார் .அவரிடம் பல பெண்கள் சர்ச்சுக்கு தேடி வருவர் .அப்படி வரும் பெண்களில் 24 வயதான பெண்ணொருவர் அவருடன் நன்றாக பழகினார் .அப்படி பழகிய அந்த பெண்ணை அந்த பாதிரியார் பல இடங்களுக்கு அழைத்து சென்றார் .பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காமித்தார் .அதனால் அந்த பெண்ணும் அவரின் ஆசை வலையில் விழுந்தார் .

பின்னர் அந்த ஜோசெப் அந்த பெண்ணை அவரின் வீட்டிலும் மற்றும் பல இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அந்த ஜோசப்பிடம் தன்னை கல்யாணம் செய்து கொள்ள கேட்டார் .ஆனால் அதற்கு அந்த ஜோசப் மறுத்து விட்டார் .மேலும் அந்த பெண்ணையும் அவரின் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார் .இதனால் அந்த பெண் அந்த ஜோசப் மீது பலாத்கார புகார் கொடுத்தார் .மேலும் அந்த ஜோசப் மீது அவரின் இரண்டாவது மனைவியும் வரதட்சணை புகார் கொடுத்தார் .அந்த புகாரும் விசாரணையில் உள்ளது .இந்நிலையில் அவர் மீது 24 வயதான பெண் பலாத்கார புகார் கொடுத்துள்ளதால் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Contact Us