வேறொருவரை காப்பாற்ற முயன்றதால் ரஷ்ய அமைச்சருக்கு ஏற்பட்ட சோகம்!

 

ரஷ்யாவின் அவசர சூழ்நிலைகளுக்கான அமைச்சர் யென்ஜெனி ஜினிசெவ் ( Yevgeny Gini Sev)தண்ணீரில் மூழ்கி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் ஆர்டிக்கில் ஒரு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

ஆர்டிக் பகுதியில் நோரில்ஸ்கில் அமைச்சர் ராணுவ பயிற்சியை மேற்கொண்டிருந்தார். இந்த பயிற்சியை ஆர்டி எனும் செய்தி நிறுவனத்தின் கேமராமேன் படம் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த கேமராமேன் தவறி தண்ணீரில் விழுந்தார்.

இந்நிலையில் அவரை காப்பாற்ற யென்ஜெனி போராடிய போது தண்ணீரில் மூழ்கி இறந்தார். அவர் அந்த கேமராமேனை காப்பாற்ற தண்ணீரில் இறங்கிய நிலையில் அவருக்கு என்னவாயிற்று என்பதை யாரும் கண்டுபிடிக்க இயலவில்லை. தண்ணீரில் குதிக்கும் கற்கள் ஏதேனும் குத்தி அவர் இறந்தாரா என தெரியவில்லை.

இந்நிலையில் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளது

இதேவேளை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் (Vladimir Putin) மறு தேர்தலில் வெற்றி பெற்ற 2018 ஆம் ஆண்டு முதல் அவசர சூழ்நிலைக்கான அமைச்சராக இருந்து வந்தார் யென்ஜெனி ( Yevgeny Gini Sev). மேலும் இவர் புதினின் தனிப்படை பாதுகாப்பு அதிகாரியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us