இந்தோனேசியாவின் சிறையில் பயங்கர தீ விபத்து.. கைதிகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு..!!

 

இந்தோனேசியாவில் உள்ள பாண்டன் என்ற மாகாணத்தில் இருக்கும் தங்கெராங்க என்ற சிறையில் மின்கசிவு ஏற்பட்டு, திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது. தீ பற்றிய கட்டிடத்தில் 122 கைதிகள் இருந்துள்ளார்கள். எனவே உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பல மணி நேரங்களாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

எனினும், இந்த பயங்கர தீ விபத்தில் கைதிகள் உட்பட 41 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 40 நபர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த கட்டிடத்தில் இருந்த பிற கைதிகளை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர். சிறையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட காரணம் என்ன? என்பது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Contact Us