நடந்து சென்ற பெண்ணை தொடர்ந்து வந்த வாலிபர் -அடுத்து பட்டப்பகலில் நடந்த கொடுமை

 

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள மேற்கு கல்யாணின் காந்தாரி பகுதியில் லட்சுமி மோஹிட் என்ற பெண் தனது கணவரோடு வசித்து வந்தார் .அந்த பெண் அங்குள்ள பல வீடுகளில் வீட்டு உதவியாளராக பணியாற்றி வருகிறார் .அவருக்கும் அந்த பெண்ணுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு வருவது வழக்கமான ஒன்று .இந்நிலையில் அந்த பெண் கடந்த வாரம் அங்குள்ள சாலையில் பட்ட பகலில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது யாரோ ஒருவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து வருவதாக அவர் சந்தேகப்பட்டு அவர் யாரென அடையாளம் காண்பதற்குள் ,அந்த வாலிபர் அந்த பெண்ணின் முகத்தினை மூடினார் .பிறகு தான் கொண்டு வந்திருந்த ஒரு கத்தியை எடுத்து அந்த பெண்ணை பலமுறை குத்தி கொலை செய்து விட்டு ஓடி விட்டார் .

பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணின் பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் .பிறகு இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர் .முதலில் போலீசார் அந்த பெண்ணை கற்களால் அடித்து கொலை செய்யப்பட்டதாக நினைத்தனர் .ஆனால் போஸ்ட் மார்ட்டத்தில் அவர் கத்தியால் குத்த்ப்பட்டதை கண்டறிந்தனர் .இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவரை சந்தேகப்பட்டு விசாரித்து வருகின்றனர்

Contact Us