கணவனை இழந்த பெண்ணை குறி வைத்து ஏமாற்றிய நபர்..! உஷார் வரும்…

கணவனை இழந்த தன்னிடம் ஆசை வார்த்தை கூறி இரண்டாம் திருமணம் செய்து விட்டு ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பெண் புகார்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராணி.13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் கணவர் இறந்து விட்ட நிலையில் மறுமணம் செய்யாமல் இருந்துள்ளார். இவரிடம் மதகுபட்டியில் தனியார் கிளினிக்கில் பணிபுரியும்

கருப்பசாமி என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமணம் முடித்த சில மாதங்களிலேயே கருப்பசாமி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தன்னை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு விரட்ட முயற்சிப்பதாக கணவர் கருப்பசாமி மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற காவல் கண்காணிப்பாளர் புகார் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். கண்காணிப்பாளரின் உத்தரவையடுத்து கருப்பசாமியிடம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கணவனை இழந்து மகனே கதி என்ற வழியில் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு ஆசை வார்த்தைகளை கூறி பழகி வாலிபர் ஏமாற்றியதால், இப்போது அந்த பெண் தனது சொந்த வீட்டிற்கு கூட போகமுடியாமல் நிர்கதியாகி நிற்கும் சம்பவம் சோகத்தை தருகிறது.

Contact Us