நுவரேலியா காட்டுக்குள் காணாமல் போன யுவதி 5 நாட்களின் பின் மீட்பு!! நடந்தது என்ன?

 

நுவரெலியா, டன்சினன் காட்டுப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற போது மாயமான 25 வயது யுவதி, ஐந்து நாட்களுக்குப் பிறகு கிகிளியமான காட்டு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா வட்டபஹால பகுதியில் வசிக்கும் ஜெயபாலன் கற்பகதாரணி (25) என்பவரே மீட்கப்பட்டுள்ளார். தனது தாயுடன் டன்சினன் காட்டில் கடந்த (05) விறகு தேட சென்ற போது யுவதி காணாமல் போனார்.

நுவரெலியா இராணுவத்தினர், நுவரெலியா பொலிஸ் மற்றும் டன்சினன் தோட்டத் தொழிலாளர்கள் காணாமல் போன யுவதியை ஐந்து நாட்களாக- 96 மணி நேர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நுவரெலியா சாந்திபுர பகுதியில் வசிப்பவர்கள் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது நுவரெலியா கிக்கிளியமான ரிசர்வ் பகுதியில் யுவதியின் உதவிக்குரல் கேட்டதையடுத்து, இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

5 நாட்களாக பட்டினியுடனிருந்த யுவதிக்கு கிராம மக்கள் உணவு மற்றும் பானம் கொடுத்து பின்னர் நுவரெலியா போலீசில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது நுவரெலியா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Contact Us