பணத்திற்காக தாயின் உடலை பாதாளத்தில் மறைத்து வைத்திருந்த மகன்

 

இறந்த தாயின் உடலுக்கு இறுதி சடங்கு செய்யாமல் அதனை பாதாள அறையில் மறைத்து வந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்கு செய்வது தான் வழக்கம். ஆனால், ஆஸ்திரியாவை சேர்ந்த ஒருவர் தனது தாயின் இறந்த உடலை பாதள அறையில் மறைத்து வைத்துள்ளார்.

ஆஸ்திரியாவின் மேற்கு மாகாண டைரோல் பகுதியில் வசித்து வரும் 89 வயது மூதாட்டி ஒருவர் மரணமடைந்தார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்யாமல் அவரது மகன் அந்த உடலை தனது வீட்டின் பாதாள அறையில் மறைத்து வைத்துள்ளார். தாயின் ஓய்வூதியத்திற்காக அவர் இந்த செயலை அவர் செய்துள்ளார். மேலும், ஐஸ்கட்டிகள் மற்றும் பேண்டேஜ்களை வைத்து உடலை பாதுகாத்து வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி தாயின் ஓராண்டு கால ஓய்வூதியத்தையும் அவர் பெற்று கொண்டுள்ளார். இதற்கிடையில், புதியதாக வந்த தபால்காரர் அந்த மூதாட்டியை பார்க்க வேண்டும் என கூறிய நிலையில் தான் இவருடைய இந்த நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையின விசாரித்து வருகின்றனர்.

Contact Us