கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன் …. 20 ஆண்டுகளாக நடந்த வழக்கில் திடீர் திருப்பம் ….!!!

 

ஸ்விட்சர்லாந்தில் வாலைஸ் மாகாணத்தில் கடந்த 2002 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 வயதான Luca Mongelli என்ற சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அப்போது கடும் பனிப்பொழிவில் பல மணி நேரமாக சுயநினைவின்றியும், சிறுவனை மீட்கும் போது இதயம் நுரையீரல் ஸ்தம்பித்து போயிருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் சுமார் 4 மாதங்களாக கோமாவில் இருந்து பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று என்ன நடந்தது என்பது இதுவரை மர்மமாகவே காணப்படுகிறது.இந்த நிலையில் அந்த சிறுவன் கழுத்துக்குக் கீழே செயலிழந்து நிலையிலும், பார்வைக்கோளாறாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான வழக்கை விசாரணை நடத்தி வந்த வாலைஸ் விசாரணைக்குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு சாட்சியங்களை விசாரித்தது. ஆனால் இதில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் சியோன் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தன்னை தாக்கியதாக அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த வாலிபர்கள் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது .அதுமட்டுமின்றி சம்பவம் நடந்த தினத்தன்று தங்களின் பிள்ளைகள் பள்ளிக்கு சென்றதாகவும் அவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு கைவிடப்பட்ட இது தொடர்பான சாட்சியங்களும் போதிய ஆதாரமும் கிடைத்தால் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு கைவிடப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.

Contact Us