வரும் குளிர்காலத்தில் லாக் டவுன் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று- அழுத்தம் கொடுக்கும் அதிகாரிகள் !

பிரித்தானியாவில் தற்போது ஒரு நாளைக்கு 7.000 பேர் வைத்திய சாலையில் அனுமதியாகி வருவதாகவும். அதேவேளை குறைந்த பட்சம் 4,500 பேர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்வதாகவும் அறியப்படுகிறது. இன் நிலை நீடித்தால், இன்னும் சில வாரங்களில் அனைத்து வைத்தியசாலைகளும் நிரம்பி வழிய ஆரம்பிக்கும் என்று, பொறிஸ் ஜோன்சனுக்கு, அதிகாரிகள் கடும் எச்சரிக்கை ஒன்றை இன்று விடுத்துள்ளதோடு. குளிர்கால லாக் டவுன் அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் ஒரு லாக் டவுனை அறிவித்தால் தான் நிலமையை கட்டுப்பாட்டினுள் கொண்டு வர முடியும் என்று அவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Contact Us