ஒரு வாரமே உயிர் வாழ முடியும் : ஈஷா என்ற ஈழத் தமிழ் சிறுமிக்கு இறுதியாக ஸ்டெம் செல்கள் கிடைத்தது !

கடந்த மே மாதம் 13ம் திகதி, காலில் சிறு வீக்கம் ஏற்பட்டது. அவ்வளவு தான். ஈஷாவின் அப்பா அம்மா உடனே அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்கள். லண்டன் காங்ஸ் ஹில் பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில், 4 வயதே ஆன ஈஷாவுக்கு, கோடியில் ஒருவருக்கு வரும், ரத்தப் புற்று நோய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் அவர் சில வாரங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்றும். இல்லையென்றால் அவருக்கு பொருத்தமான ஸ்டெம் செல்களை கண்டு பிடித்து அவரச சிகிச்சை கொடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவர் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்டதால், இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரின் ஸ்டெம் செல்களே அவருக்கு 100 விகிதம் பொருந்தும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இதனூடாக ஈஷாவுக்கு உதவுமாறு பல தமிழர்கள், தமது வாட்ஸ் அப் மூலமாக கோரிக்கை விடுத்து, பலருக்கு ஷியார் செய்தார்கள்.

கடந்த 15 வாரங்களாக ஈஷா மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில். தற்போது அவருக்கு சரியாக பொருந்தக் கூடிய ஸ்டெம் செல்கள் கிடைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள். இது பெரும்பாலும் ஒரு ஈழத் தமிழருடையது என்று தான் கூறப்படுகிறது. எனவே உடனே அவருக்கான சிகிச்சை ஆரம்பிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். Source: Family’s joy as stem cell donor MATCH is found for ‘sassy and funny’ four-year-old girl who was given just weeks to live after bruise on her leg turned out to be cancer:

ஈஷாவுக்கு உதவ லண்டனில் உள்ள பல நூறு தமிழர்கள் முன் வந்து செயல்பட்ட விதம், தமிழர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

Contact Us