“நண்பனின் காதலிக்கு வலை வீசி …” -அடிக்கடி வீட்டுக்கு வந்த வாலிபரால் நேர்ந்த விபரீதம் .

 

உத்திர பிரதேச மாநிலம் மீரட்டில் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தனோரா மண்டி என்ற இடத்தில் நசீம் என்பவர் வசித்து வந்தார் .இவர் அதே பகுதியில் வசிக்கும் ஹீனா என்ற பெண்ணை காதலித்து வந்தார் .
அந்த நசீம், மீரட்டில் உள்ள கித்தோர் நகரில் மேசன் வேலை செய்து வந்தார். பிறகு அவர் அவரின் காதலி ஹினாவுடன் கர்முக்தேஸ்வரில் வாடகை வீட்டில் கல்யாணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்

இந்நிலையில் நசீமின் நண்பர் டேனிஷ் அவரின் வீட்டிற்குள் அடிக்கடி வந்து போனார் .அப்போது அவர் நண்பனின் வீட்டிலிருந்த ஹினாவுடன்பேசி பழகி அவருடன் உறவை வளர்த்துக் கொண்டார். பின்னர் அந்த பெண்னின் காதலன் நசீமுக்கு இருவரும் ரகசியமாக சந்தித்து பேசும் விஷயம் தெரிய வந்தது .அதனால் அவர் தன்னுடைய நண்பன் டேனிஷிடம், தன் வீட்டிற்கு இனி வரக்கூடாது என்று கூறினார் .மேலும் அவரை ஹீனாவை மறந்து விடுமாறும் மீறினால் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார் .
அதை கேட்டு அதிர்ந்து போன அந்த டேனிஷ் அவரின் நண்பர் நசீமை ஆறு மாதங்களுக்கு முன்பு கொலை செய்து அங்குள்ள கால்வாயில் வீசிவிட்டார் .பின்னர் டேனிஷ் ஹினாவை மணந்து கொண்டு ,அவருடன் கர்முக்தேஸ்வரில் வாழத் தொடங்கினார்.இந்நிலையில் கடந்த ஆறுமாதமாக நசீமை காணாத அவரின் பெற்றோர் சமீபத்தில் போலீசில் புகாரளித்தனர் .போலீசார் வழக்கு பதிந்து நசீமை தேடிய போது அவரின் பிணம் கன்டுப்பிடிக்க பட்டது .பிறகு அவரை கொலை செய்த டேனிஷை கைது செய்தனர்

Contact Us