டிரம்ப் சீனா மீது போர் தொடுக்கலாம் என்ற அச்சத்தில் சீன இராணுவதளபதியை இரகசியமாக தொடர்புகொண்டார் அமெரிக்க இராணுவதளபதி- பரபரப்பு !

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி வகித்த காலத்தில் அவர் சீனாவிற்கு எதிராக போர் தொடுக்கலாம் என்ற அச்சம் காரணமாக அமெரிக்க இராணுவ தளபதி சீன இராணுவதளபதியை இரகசியமாக தொடர்புகொண்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க இராணுவதளபதி மார்க் மில்லேய் சீனா இராணுவதளபதியை இரகசியமாக தொடர்புகொண்டார் என புதிதாக வெளியான நூலொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வோசிங்டன் போஸ்டின் புலனாய்வு செய்தியாளர்கள் வெளியிடடுள்ள நூலில் மார்க் வில்லே சீன ஜெனரல் லீ சூச்செங்கினை கடந்தஜனவரியில் தொடர்புகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை டிரம்ப் ஏற்க மறுத்த பின்னரே அமெரிக்க இராணுவதளபதி சீன இராணுவதளபதியை தொடர்புகொண்டுள்ளார். பெரில் என்ற அந்த நூலில் ஜனவரி 6 ம் திகதி இடம்பெற்ற கலவரங்களின் பின்னர் டிரம்ப் தேர்தலின் பின்னர் மோசமான மனோநிலை பாதி;ப்பிற்கு உட்பட்டு;ள்ளார் என இராணுவதளபதி கருதி;னார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் முரட்டுத்தனமாக செயற்படுவார் என அவர் அஞ்சினார் என பெரிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us