கள்ளக்காதலர்களுக்குள் நடந்த போட்டாபோட்டி – நண்பன் சரமாரி குத்திக்கொலை

 

திருமணமான பெண்ணை இரண்டு நண்பர்கள் காதலித்து வந்துள்ளனர். இருவருக்குமிடையே யார் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்ற போட்டாபோட்டி இருந்திருக்கிறது. இதில் நண்பரை கத்தியால் குத்தி கொன்று இருக்கிறார் ஒருவர். சேலம் மாவட்டத்தில் அயோத்தியாபட்டினத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

அயோதியாப்பட்டிணத்தை சேர்ந்த கிருபை ராஜ்(23)க்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான கலைமணி(23) என்ற இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறி இருக்கிறது. கலைமணியை செல்லும் போதெல்லாம் தனது நண்பன் கலையரசனையும் அழைத்துச் சென்றிருக்கிறார் கிருபைராஜ். அந்த சமயங்களில் கலையரசனுக்கு கலைமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள உறவாக மாறியிருகிறது.

நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததால் கலைமணியை யார் திருமணம் செய்துகொள்வது என்பதில் போட்டா போட்டி எழுந்திருக்கிறது . இந்த சூழ்நிலையில் சேலம் குமரகிரி அருகே இருக்கும் மலைப்பகுதிக்கு கிருபைராஜும் கலைமணியும் சென்றிருக்கின்றனர் . அவர்கள் அங்கு சென்று இருப்பது தெரிந்து கொண்ட கலையரசன் பைக்கில் அங்கு சென்று இருக்கிறார்.

அப்போதும் கலைவாணியை யார் திருமணம் செய்து கொள்வது என்பதில் மீண்டும் பிரச்சினை எழுந்து இருக்கிறது. இதில் கிருபைராஜ், கலைமணியை நான் திருமணம் செய்து கொள்கிறேன். அதற்கு நீ ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதை மறுத்து தான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லி இருக்கிறார் கலையரசன். இதனால் நண்பர்கள் இருவருக்கிடையேயும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது ஆத்திரமடைந்த கலையரசன் பைக்கில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை ஓடிச்சென்று எடுத்து வந்து கிருபைராஜ் என்பவரை கலையரசன் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் கிருபைராஜ். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைமணி பக்கத்தில் இருக்கும் பொதுமக்களை மக்களிடம் சென்று விவரத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவர்கள் உடனே கிச்சிப்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்க கிச்சிப்பாளையம் போலீசார் விரைந்து வந்து கிருபைராஜ் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, தீவிர தேடலில் நண்பனை கொலை செய்த கலைரசனையை உடனடியாக போலீசார் செய்து விட்டனர்.

கள்ளக்காதலியை யார் திருமணம் செய்து கொள்வது என்ற போட்டா போட்டியில் நண்பனை கொலை செய்த சம்பவம் அயோத்தியாபட்டினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us