யாழில் சாராயப் போத்தலில் வைத்த வாயை எடுக்காமல் சாராயம் குடிக்கும் போட்டி!! ஒருவன் பலி!!

 

மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் அதிக மதுபானம் அருந்தும் போட்டி விபரீதமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மராட்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மதுபானம் அருந்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் யார் அதிக மதுபானம் அருந்துவது என்ற போட்டியில் ஒருவர் உயிரிழந்தார்.

அவர் மதுபானம் புரையேறி இறந்ததாக, அவருடன் போட்டியில் ஈடுபட்டவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.

எனினும், அவர் அதிக மது அருந்தச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்றும் உறுதியாகியது.

Contact Us