அரசியல்கைதிகள் மீது ஆண் உறுப்பு மலவாசல் போன்றவற்றில் மிக மோசமான பாலியல் சித்திரவதை!! கூறுவது யார்?

 

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 26ஆம் திகதி 12 தமிழ் அரசியல் கைதிகள், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைத்து செல்லப்பட்டு அளுத்கடை பதில் நீதிவான் முன் முற்படுத்தப்பட்டனர். அவர்கள் 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

29ஆம் திகதி அந்த 12 பேரும் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 540 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் ஒரு ஏஎஸ்பியே வாக்குமூலம் பெற வேண்டும். ஆனால், அப்படி பெறாமலேயே, ஏஎஸ்பிதான் வாக்குமூலம் பெற்றதாக நீதிமன்றத்தில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இப்படி 540 நாட்கள் கொடுமையான சித்திரவதைக்கு பின்னர் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டவர்கள், 3 நாட்களின் பின் மகசீன் சிறைக்கு மாற்றப்படுவதற்கு முன் அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஆண்குறி, மலவாசல் மிக கேவலமான முறையில் சோதிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பாலியல் சித்திரவதை. 540 நாள் பயங்கரவாத தடுப்பு பிரிவில் இருந்தவர்கள், விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து விட்டு, மகசீனுக்கு மாறும் போது போதைப்பொருள் இருக்கிறதென விசாரிக்கிறீர்கள் என்றால், அவர்களிடம் எப்படி போதைப்பொருள் சென்றிருக்க முடியும்?

அப்படியென்றால் சிறை அதிகாரிகள்தான் அதை கொடுத்திருக்க முடியும். அப்படியென்றால் நீங்கள் தினமும் அந்த சிறைச்சாலை அதிகாரியையும், உத்தியோகத்தர்களையும் வீதியில் வைத்து நிர்வாணமாக்கி சோதனை செய்ய வேண்டும்.

Contact Us