சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…. ஏமாற்றிய 14 வயது சிறுமி…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

 

பிரிட்டனில் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட Olly Stephens என்கிற சிறுவன் வசித்து வந்தான். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள 14 வயதேயான சிறுமி ஒருவர் Olly Stephens-யை ஏமாற்றி தன்னுடன் அழைத்து சென்று தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கோர சம்பவமானது Olly Stephens வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் சிறுவன் Olly Stephens-னின் தந்தை கூறியதாவது, “நட்பு பாராட்டும் விதமாக அந்த சிறுமி எங்களது வீட்டிற்கு வந்த நாளை எங்களால் மறக்க இயலாது” என கதறி அழுது கூறியுள்ளார். இந்நிலையில் சிறுவனை கொன்ற 14 வயது சிறுவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து சிறுவர்களுக்கான சிறையில் அடைக்கபட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 14 வயது சிறுமிக்கு 3 ஆண்டுகளும் 2 மாதமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Contact Us