கிட்ட வந்து பார்த்து பெற்றோல் அடிக்க விடும் ஆட்கள்: இனி 20 பவுண்டுகள் தான் அடிக்கலாம் ! 5000 Fine

லண்டனில் உள்ள சில பெற்றோல் நிலையங்களில், நீண்ட வருசையில் நின்று பெற்றோல் அடிக்க சென்ற தமிழர் ஒருவருக்கு நடந்த கதி இது. குறித்த நிலையத்தில் வேலை பார்க்கும் நபர் வந்து காரினுள் இருக்கும் பெற்றோல் மீட்டரைப் பார்கிறார். அரைவாசிக்கு மேல் பெற்றோல் இருந்தால். அடிக்க முடியாது என்று திருப்பி அனுப்புகிறார்கள். அறவே முடிந்த நிலையில் வரும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுப்பதோடு , £20 பவுண்டுகள் மட்டுமே அடிக்க முடியும் என்ற புது கட்டுப்பாடுகளையும் போட்டுள்ளது சில நிலையங்கள். இது இவ்வாறு இருக்க.. இந்த பிரச்சனை தற்போது தீரக் கூடிய பிரச்சனை இல்லை என்று அரசு கூறி கையை விரித்துள்ளது. கொரோனாவோடு வாழப் பழகுங்கள் என்று கூறியது போல…

பெற்றோல் இல்லாமல் வாழப் பழகுங்கள் என்று கூறும் நிலை வந்துள்ளது. இதேவேளை மோட்டர் வேயில்(நெடுஞ்சாலையில்) பெற்றோல் இல்லாமல் உங்கள் வாகனம் நின்றால். அதற்கு 100 பவுண்டு முதல் கொண்டு 5,000 பவுண்டுகள் வரை தண்டப் பணமாக அறவிடப்படும் என்று பொலிசார் எச்சரித்துள்ளார்கள்.எனவே மோட்டர் வே எடுக்க முன்னர் போதுமான அளவு பெற்றோல் உள்ளதா என்று பார்க்கவேண்டும். என்பது தற்போதைய சட்டம்.

Contact Us