பயங்கரவாதிகளின் புகலிடம்…. பிரபல நாடுகள் குற்றச்சாட்டு…. ஜான் கெர்பி கவலை….!!

 

பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாதிகள் அமெரிக்காவில் தஞ்சமடைவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஆப்கானும் பாகிஸ்தான் மீது இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இதில் தலீபான்களுக்கு ஆயுதம், குளிர் காலத்தில் தலீபான் தலைவர்களுக்கு தங்குமிடம் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் முதலியவற்றை வழங்கி ஆப்கானில் தீவிரவாதத்தை மேலும் ஊக்குவிப்பதாக கூறியிருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஜான் கெர்பி கூறியதில், “பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் நேர்மையாக உள்ளோம். பாகிஸ்தானும்
தீவிரவாதத்தை ஒழிப்பதில் பங்களிக்க வேண்டும். இதுகுறித்த கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை மூலம் சரி செய்ய விரும்புகிறோம். நாட்டின் எல்லையில் உருவாகும் பாதிப்பு பாகிஸ்தானுக்கும் உண்டு என்பதை அந்நாடு உணர வேண்டும்” என்று கூறினார்.

மேலும் ஆப்கான் மீது டிரோன்களைப் பறக்கவிடுவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அரசுக்கு தலீபான்கள் எச்சரிக்கை விடுத்தது. இதற்கு பதிலாக, தேவைப்பட்டால் ட்ரோன் தாக்குதல் இனியும் தொடரும் என்று ஜான் கெர்பி அறிவித்துள்ளார்.

Contact Us