கணவனை இழந்த அத்தையை கொலை செய்த மருமகன்: பகீர் பின்னணி..!

தூத்துக்குடி அருகே அத்தையை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் உடன்குடி அருகேயுள்ள பெரியவன் திட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வ முருகன். இவருக்கு அருணா என்ற மனைவியும் மகன்களும் உள்ளனர். செல்வ முருகன் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்தாண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், செல்வ குமாரின் நினைவு நாளில் திதி கொடுப்பதற்காக அவரது அக்கா மகன் முத்துக்குமார் அருணாவின் வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், ‘ உன் மாமாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே திதி கொடுத்துவிட்டோம்” என்று அருணா மருமகன் முத்துவிடம் கூறியுள்ளார்.

இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முத்துக்குமார் அத்தை அருணாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

சம்பவம் அறிந்து வந்த போலீசார் அருணாவின் உடலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை செய்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த முத்துக்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த அருணாவின் 11 சவரன் நகையையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மாமாவுக்கு திதி கொடுக்கும் பேச்சுவார்த்தையில் அத்தையை கொலை செய்த மருமகனின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us