வான் பரப்புக்குள் ஊடுருவிய…. சீனாவின் 38 போர் விமானங்கள்…. தைவான் அரசு குற்றச்சாட்டு….!!

 

சீனாவில் கடந்த 1949 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரினால் சீனாவும் தைவானும் தனி நாடாக பிரிந்தது. இருப்பினும், சீன அரசு தைவான் தனது நாட்டின் ஒரு பங்கு என்று கூறுகின்றது. குறிப்பாக, சீன அரசுக்கு தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் தைவானை ஆக்ரமிக்க தயாராக உள்ளோம் என தைவானுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

இதற்கு முன்னதாக பலமுறை தைவான் நாட்டு வான் பரப்புக்குள் சீன அரசு நுழைந்துள்ளது. குறிப்பாக போர் விமானங்கள் மூலம் அத்துமீறுவதோடு தைவான் அரசுக்கு மிரட்டல் விடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. மேலும் கடந்த 1949ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி சீனா தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளை தேசிய தினமாக கொண்டாடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து சீனாவில் நேற்று தேசிய தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவின் போர் விமானங்கள் தைவானின் வான் பரப்புக்குள் காலையும் இரவும் அனுமதியின்றி நுழைந்துள்ளது. இதில் சீனாவை சேர்ந்த J-16, H-6 உள்பட 38 போர் விமானங்கள் அடங்கும். இது குறித்து சீனா நாட்டின் மீது தைவான் அரசு குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் சீன போர் விமானங்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவே தைவான் அரசு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தியதாக அறிவித்துள்ளது.

Contact Us