நடுவானில் விமான விபத்து…. 2 பேர் பலியான சோகம்…. விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள்….!!

 

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டரும் விமானமும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது. இந்த கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறை செய்தி தொடர்பாளர் ஜேசன் மேக் கிளிமன்ஸ் கூறியதாவது, ” இந்த விபத்தானது நடுவானில் ஹெலிகாப்டரும் விமானமும் மோதியதால் ஏற்பட்டது. இதில் விமானமானது எந்த வித சேதமும் இல்லாமல் பாதுகாப்பாக தரையிறங்கியது. ஆனால் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.இந்த விபத்து வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Contact Us