“பள்ளிக்கூடம் போன பையன பாழாக்கிட்டிங்களே” -சிதைக்கப்பட்டு கிடந்த சிறுவன் .

 

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கேந்திரிய வித்யாலயா சுத்திகரிப்பு நகரைச் சேர்ந்த பாத் கிராமத்தில் 15 வயதான ஒரு டீனேஜ சிறுவன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார் .அவரை தினமும் அவருடைய பெற்றோர் பள்ளிக்கு அனுப்பிவிட்டு தங்களின் பணிகளை பார்க்க போய் விடுவார்கள் .

இந்நிலையில் அந்த சிறுவன் கடந்த வாரம் புதன் கிழமை வழக்கம் போல பள்ளிக்கு சென்றார் .அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை .
அதனால் பதட்டமான அந்த சிறுவனின் பெற்றோர் அன்று இரவு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .போலீசார் காணாமல் போன வழக்கை பதிவு செய்து அந்த சிறுவனை அவரின் பள்ளிக்கூடம் மற்றும் நண்பர்கள் வீடு என்று பல இடங்களில் தேடி வந்தனர் .

இதற்கிடையே ஒரு சிறுவனின் உடல் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்து அவர்கள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர் .அப்போது அந்த சிறுவனின் உடலை கைப்பற்றி அவரின் பெற்றோரிடம் காமித்த போது ,அவர்கள் அது காணாமல் போன தங்களின் மகனின் உடல்தான் என்று அடையாளம் காமித்தனர் .அப்போது போலீசார் அந்த சிறுவனை யாரோ மர்ம நபர்கள் கொலை செய்து ,அடையாளம் தெரியாமலிருக்க முகத்தை கற்களால் சிதைத்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்

பிறகு அங்கு வந்த தடயவியல் குழு இரத்தம் படிந்த உடைகள், கல் ஆகியவற்றிலிருந்து முக்கியமான தகவல்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு வீடியோ எடுத்தது.

Contact Us