புதிய கருக்கலைப்பு சட்டம்…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

 

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்ட விதிகளின்படி, 6 வார கர்ப்பத்திற்குப் பிறகு கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அமெரிக்க சட்டமானது, எந்தவொரு தனிப்பட்ட குடிமகனும் டெக்சாஸ் கருக்கலைப்பு வழங்குநர்கள் மீது சட்டத்தை மீறியதற்காக வழக்குத் தொடர அனுமதிக்கிறது.

மேலும் டெக்ஸாஸ் சட்டமானது இதய துடிப்பு சட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சட்டம் அல்ட்ராசவுண்ட் கருவியின் மூலம் இதயத்துடிப்பை கண்டறிந்த பிறகு கருக்கலைப்பை தடை செய்கிறது. இந்நிலையில் இதில் பிரச்சனை என்னவென்றால், சிலருக்கு ஆறு வாரங்களுக்கு முன்பே இதயத்துடிப்பு ஏற்படலாம்.

எனவே இது குறித்து ஒரு முடிவை எடுக்க இக்காலமானது போதுமானதாக இல்லை. ஏனென்றால் பல பெண்களுக்கு அவர்கள் கர்ப்பமாக இருப்பதை அறிய 6 வாரங்களுக்கு மேல் தேவைப்படலாம். மேலும் இதனால் தாயின் உயிரைக் காப்பாற்ற இயலும் என்றால் அதற்கு மருத்துவ விலக்குகள் வழங்கபடுகிறது. ஆனால் பாலியல் பலாத்காரம் அல்லது தேவையற்ற கர்ப்பத்திற்கு இது விலக்கு அளிக்காது. இதனை தொடர்ந்து கருக்கலைப்பு செய்பவர்களுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரவும் புதிய சட்டம் அனுமதிக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் 50க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கடந்த சனிக்கிழமையன்று கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். இந்த பேரணியானது ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இது போல் இவர்களுக்கு ஆதரவாக பிரிட்டனில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கருக்கலைப்பு உரிமைக்காக பிரச்சாரம் செய்ய லண்டனில் உள்ள டிராஃபல்கர் சதுக்கம் வழியாக பேரணி சென்றனர்.

Contact Us