2 தடவை கொலை முயற்ச்சி பலிக்கவில்லை ஆனால் மர்மான முறையில் இறந்த ஓவியர்- நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி…

முஸ்லீம்களின் புனிதர் நபிகள் நாயகத்தை, இழிவு படுத்தி ஓவியம் ஒன்றை வரைந்தார் சூவீடனில் உள்ள ஓவியர் ஒருவர். லாவ்ஸ் வில்க்ஸ் என்ற இந்த ஓவியருக்கு 75 வயது ஆகிறது. அவரை கொலை செய்ய சில முஸ்லீம்கள் 2 தடவை முறச்சி செய்தார்கள். ஆனால் அது பலிக்கவில்லை. இன் நிலையில் அவர் உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதை கருத்தில் கொண்ட சூவிடன் அரசு, உடனடியாக அவருக்கு 2 பொலிசாரை பாதுகாப்புக்கு அனுப்பியது. 24 மணி நேரமும் அவர் பொலிஸ் பாதுகாப்பில் தான் இருந்து வந்துள்ளார். ஆனால் நேற்று திடீரென நடந்த ஒரு மர்மான விபத்தில் அவரும், அவர் பாதுகாப்பிற்காக சென்ற 2 பொலிஸ் அதிகாரிகளும் மரணித்துள்ளார்கள் என்பது சூவீடனை மட்டும் அல்ல, உலகையே அதிரவைத்துள்ளது.

குறித்த விபத்து எப்படி நடந்தது ? கார் எவ்வாறு சாலையில் தீ பற்றி எரிந்தது என்பது எதுவுமே பொலிசாருக்கு புலப்படவில்லை. இது மிக மிக நேர்த்தியாக திட்டமிடப்பட்ட கொலை என்று கூறப்படுகிறது.

Contact Us