“அம்மா உறங்குகிறார், அமைதியாக இருங்கள் “…தாய் இறந்தது தெரியாத குழந்தைகளின் பரிதாப பேச்சு

 

வடமேற்கு பிரான்சில் திடீரென உயிரிழந்த தாயினை உறங்குவதாக நினைத்து ஒரே வீட்டில் இரு குழந்தைகள் பல நாட்கள் இருந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவலை பொலிஸார் பள்ளிக்கு குழந்தைககள் வராததால் பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பெயரில் குழந்தைகளின் வீட்டிற்கு சென்றபோது தான் அவர்களுக்கே தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிஸாரிடம் ” அமைதியாக இருங்கள் அம்மா உறங்குகிறார்” என இரு குழந்தைகளும் கூறியுள்ளனர். அதனையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியபோது அவர் இயற்கையாக தான் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அந்த இரு சிறுமிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அரசின் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

Contact Us