நிர்வாண கோலத்தில் ரத்தவெள்ளத்தில் கிடந்த மனைவி-கணவன் தப்பியோட்டம்

 

இளைஞரின் உண்மை முகம் தெரியாமல் காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் தெரியவர அதிர்ந்து போயிருக்கிறார் இளம்பெண். இதனால் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் வர கடைசியில் கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார் கணவர்.

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டரசன்கோட்டையை சேர்ந்த கண்ணையன்- மணிமுத்து தம்பதிக்கு நான்கு மகள்கள். இதில் கண்ணையன் நாட்டரசன் கோட்டையிலேயே வசித்து வரும் நிலையில், மனைவி மணிமுத்து தனது நான்கு மகள்களுடன் திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.

மூத்த மகள் 19 வயதான வைஷ்ணவி அதே பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். அந்த நிறுவனத்தில் வேலை செய்துவந்த தேனி மாவட்டம் போடியை சேர்ந்த அருண்குமார்(23) உடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்களின் திருமணத்திற்கு அருண் குமாரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்பை மீறி வைஷ்ணவியை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி அன்று திருமணம் செய்திருக்கிறார்.

திருமணத்திற்குப் பின்னர் தான் அருண்குமாரின் உண்மை முகம் தெரிய வந்திருக்கிறது வைஷ்ணவிக்கு. கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்ததும் அதிர்ந்து போயிருக்கிறார். காதல் திருமணம் அப்போது கசந்திருக்கிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்திருக்கிறார் அருண்குமார்.

மனைவியை விட்டுவிட்டு தனது சொந்த ஊரான போடிக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார் அருண்குமார். அப்படித்தான் கடந்த வாரம் அருண்குமார் போடியில் இருந்து போயம்பாளையம் வந்திருக்கிறார். அப்போது மாமியார் மணிமுத்துவிடம், தனது மனைவி வைஷ்ணவியை அழைத்துச் சென்று தனியாக வீடு எடுத்து தங்க போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

வைஷ்ணவியும் நம்பி அருண்குமார் உடன் சென்றிருக்கிறார். பண்ணாரியம்மன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கின்றனர். இந்நிலையில், நேற்று நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் அக்கம் பக்கத்தினர் பூட்டாமல் இருந்த கதவை திறந்து பார்த்தபோது, வைஷ்ணவி ரத்தவெள்ளத்தில் நிர்வாண கோலத்தில் சடலமாக கிடந்திருக்கிறார். உடனே திருமுருகன்பூண்டி போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவிக்க, போலீசார் விரைந்து வந்து வைஷ்ணவியின் சடலத்தைப் பார்த்தபோது அவள் கழுத்தில் கத்தியால் குத்திய காயங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. உடனே பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு தப்பியோடி இருக்கும் அவரது கணவன் அருண்குமாரை பிடிக்க தனிப்படை அமைத்து இருக்கின்றார்கள்.

திருமணமான ஒரு வருடத்திற்குள் மனைவியே குத்தி கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் சாய்த்து விட்டு சென்ற கணவனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணமான ஓராண்டுக்குள் இளம் பெண் உயிரிழந்திருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

Contact Us