சோகம்! இறந்த தாயின் உடலுடன் பல நாட்கள் தங்கியிருந்த குழந்தைகள்!!

பிரான்சில் திடீரென உயிரிழந்த தங்கள் தாயின் உடலுடன் இரண்டு குழந்தைகள் பல நாட்கள் இருந்தது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு பிரான்சில் வசித்து வரும் 5 மற்றும் 7 வயதுடயை குழந்தைகள் இரண்டு பேர் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் போலீஸார் அவர்களின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது அந்த இரண்டு குழந்தைகளும் போலீசாரிடம், அமைதியாக இருங்கள், அம்மா தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறினர். இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் குழந்தைகளின் தாயார் ஏற்கனவே இறந்துவிட்டார்.

தாயின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அப்பெண் இயற்கையான காரணங்களினால் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த இரு சிறுமிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அரசின் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டனர். தற்போது அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

Contact Us