ஆப்கானிஸ்தான் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு.. இந்தியாவிலிருந்து கோதுமை வழங்க ஐ.நா பேச்சுவார்த்தை..!!

 

ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கைவசம் வந்த பின்பு கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. அதாவது, ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நிதி வழங்கி வந்த பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் தலிபான்கள் நாட்டை கைப்பற்றிய பின்பு நிதியளிப்பதை நிறுத்திக்கொண்டது.

மேலும், கடந்த மூன்று வருடங்களில் நாட்டில் ஏற்பட்ட வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் உணவு தானியங்கள் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது என்று ஐநாவின் உலக உணவு திட்ட அமைப்பின் இயக்குனரான, மேரி எலன் மெக்ரோட்டி கூறியிருக்கிறார். கடந்த வருடம், இந்தியா தான் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு 75 ஆயிரம் டன் அளவு கொண்ட கோதுமையை இலவசமாக அனுப்பியது.

Contact Us