சாலையில் கிடந்த மனிதத்தலை.. பதறியடித்து ஓடிய மக்கள்.. ஆப்கானிஸ்தானில் பரபரப்பு..!!

 

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கர்ஹர் என்ற மாகாணத்தில் இருக்கும் ஜலாலாபாத் என்ற நகரத்தில், அங்கூர்பாக் பகுதியின் சாலைபகுதியின் ஓரத்தில் ஒரு மனிதத் தலை கிடந்திருக்கிறது. அதனைப் பார்த்த மக்கள் தலை தெறிக்க ஓடியுள்ளனர். தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த நபர் யார்? என்பது தெரியவில்லை.

தலிபான்கள் ஆட்சி, ஆப்கானிஸ்தானில் தொடங்கியதிலிருந்து, நங்கர்ஹர் மாகாணத்தில் தொடர்ந்து தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது நடத்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே, தலீபான்கள், ஐ.எஸ் பயங்கரவாதத்தை தீர்த்துக்கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால், தலீபான்கள் நாட்டில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளாமல், மரண தண்டனை வழங்கி, அவர்களை கொன்று உடல்களை பொதுஇடங்களில் தொடங்கவிட்டு வருகிறார்கள்.

Contact Us