“பணத்துக்காக இப்படி பண்றிங்களேடா?” -புது மனைவிக்கு கணவன் மற்றும் மைத்துனரால் நேர்ந்த கொடுமை.

 

வரதட்சணை கொடுமை செய்து ஒரு புது மனைவியை அடித்து கொன்ற அவரின் கணவர் குடும்பத்தை போலீஸ் தேடி வருகிறது

அரியானாவின் பல்வால் நகரில் பரிதாபாத், பிரிவு 17 இல் வசிக்கும் பயோல் என்ற இளம் பெண் ,அங்குள்ள சிஹோல் கிராமத்தில் வசிக்கும் ரவி என்பவரை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை சில நாட்கள்தான் சந்தோஷமாக சென்றது .இதற்கு காரணம் அந்த பெண்னின் கணவரின் சகோதரரின் குடும்பம் .

அந்த கணவரின் சகோதரர் மற்றும் அவரின் மனைவி ,மாமியார் ஆகியோர் ஒன்று கூடி அந்த பெண்ணிடம் மேலும் வரதட்சணையாக இரண்டு லட்ச ருபாய் பணம் கேட்டு கொடுமை செய்தனர் .ஆனால் அந்த பெண்ணின் தந்தை தான் நிறைய செலவு செய்து இந்த கல்யாணத்தை நடத்தி விட்டதாகவும் மேலும் தன்னால் வரதட்சணை கொடுக்க இயலாது என்று கூறிவிட்டார் .இதனால் கோபமுற்ற அந்த பெண்ணின் கணவரும் அவரின் சகோதரரும் சேர்ந்து அந்த பெண்ணை அடித்து கொடுமை செய்தனர் .பின்னர் கடந்த அக்டொபர் 4ம் தேதி அவரது கணவரின் சகோதரர் டோனி, அவரது மனைவி பூனம் மற்றும் தாய் பிஜேந்திரியின் ஆகியோர் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, தூக்கில் தொங்கவிட்டனர் .அதன் பிறகு அனைவரும் தலை மறைவாகிவிட்டனர் .பிறகு அந்த பெண்ணின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் அந்த குடும்பத்தினர் மீது புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.

Contact Us