கேஸினோவில் அடித்த அதிஷ்ட்டம்… €80.000 யூரோக்கள் தண்டப்பணத்தில் முடிந்த சோகம்

கேஸினோ விளையாடி நாடு திரும்பிய ஒருவர் €80.000 யூரோக்கள் தண்டப்பணம் செலுத்தியுள்ளார்.

நீஸ் நகரில் (Nice) வசிக்கும் 38 வயதுடைய வயதுடைய ஒருவரே இவ்வாறு சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார். இவ்வாரத்தின் திங்கட்கிழமை இவர் மொனாக்கோ நாட்டில் இருந்து நீஸ் நகர விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை சோதனையிட்ட சுங்கவரித்துறையினர், அவரிடம் கணக்கில் வராத €160.000 யூரோக்கள் ரொக்கப்பணம் இருந்துள்ளது.

அந்த பணத்துக்கு அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவரை விசாரணைகளுக்கு உட்படுத்தினர். விசாரணைகளில் அவர் மொனாக்கோ நாட்டில் கேஸினோ விளையாட்டில் ஈடுபட்டு இந்த தொகையை ஜெயித்தது தெரியவந்துள்ளது.

விமான நிலையங்களூடாக வரும்போது €10.000 யூரோக்களுக்கு மேல் வைதிருக்கும் ஒவ்வொரு யூரோக்களுக்கும் ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்பதால், குறித்த நபருக்கு €80.000 யூரோக்கள் தண்டப்பணம் அறவிடப்பட்டது.

அவர் ஜெயித்த மொத்த தொகையில் 50% வீத தொகையை அவர் நீஸ் நகர நீதிமன்றத்தில் தண்டப்பணமாக செலுத்தினார்.

குறித்த நபர் இதற்கு முன்னதாக எட்டு தடவைகள் இவ்வாறு தண்டப்பணம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Contact Us