நடத்தையில் சந்தேகம்… மனைவியை கேஸ் சிலிண்டரால் அடித்துக்கொன்ற கணவர்!

 

திருச்சியில் நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கேஸ் சிலிண்டரால் அடித்துக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஜே.ஜே.நரை சேர்ந்தவர் கோபால் (35). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால், அனிதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், அனிதாவின் நடத்தையில் கோபால் சந்தேமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கோபால், மனைவி அனிதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் கோபால் ஆத்திரத்தில் கேஸ் சிலிண்டரை எடுத்து அனிதாவை தாக்கி உள்ளார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அலறி துடித்த அனிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக அனிதா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் கோபாலை கைது செய்தனர்.

Contact Us