இருளில் தவிக்கும் தேசம்…. மின்சேவை நிறுத்தம்…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

 

லெபனான் நாடு என்றாலே நமது நினைவிற்கு வருவது வெடிவிபத்து சம்பவம் தான். அதிலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அந்த வெடிவிபத்தில் 218 பேர் பலியாகியும் 7,000த்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தினால் லெபனான் நாடு 15 மில்லியன் டாலர் அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. இதனால் நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தற்பொழுது அங்கு மின்சாரம் தேவையும் அதிகரித்துள்ளது.


குறிப்பாக அந்நாட்டிற்கு மின் உற்பத்தி வழங்கி வந்த துருக்கியின் தனியார் நிறுவனம் ஒன்று மீதி தொகையை செலுத்த தவறியதால் லெபனானிற்கு மின்சேவையை நிறுத்தியுள்ளது. மேலும் நாட்டிலிருந்த எரிபொருளைக் கொண்டு போதுமான அளவு மின்சாரம் வழங்கப்பட்டு கொண்டிருந்துள்ளது. ஆனால் தற்போது அந்த எரிபொருளும் முழுவதுமாக தீர்ந்துவிட்டதால் லெபனான் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

Contact Us