தங்க சுரங்க விபத்தில்…. 11 பேர் பலியான சோகம்…. தேசிய காவல்துறை ஆணையரின் பேட்டி….!!

 

அங்கோலா நாட்டின் ஹம்போ மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்க பணிகளில் ஈடுபடுவதால் ஏற்பட்ட விபத்துகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை நேற்று ஹம்போ மாகாணத்தின் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் பத்திரிகை நிருபர்களிடம் தெரிவித்தனர்.

இது குறித்து ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை ஆணையர் பிரான்சிஸ்கோ ரிபாஸ் பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “அங்கோலா நாட்டின் பைலுண்டோ, உகுமா, சின்சென்ஜ், காலா, ஷிகாலா, சோலோஹங்கா மற்றும் ஹம்போ ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கைவினை தங்க சுரங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த பகுதிகளில் அதிகம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் சுமார் 2000 சுரங்க தொழிலாளர்கள் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்களில் பணியாற்றி வருகின்றனர்” என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக சுரங்க பணியில் ஈடுபடும் உள்ளூர் மக்களை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Contact Us