“ஆப்கானிஸ்தான் தாக்குதலில் பலியான மக்கள்..!”.. அமெரிக்க அதிகாரிகளுடன் தலீபான்கள் பேச்சுவார்த்தை..!!

 

கட்டாரின் தலைநகர் தோஹாவில், அமெரிக்க அதிகாரிகள், தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதில், பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துதல், ஆப்கானிஸ்தானில் மீதமுள்ள அமெரிக்க மக்களை மீட்பது, ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் செய்வது போன்றவை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், தலிபான்கள் கட்டார் அமைச்சர் போன்றவர்களையும் சந்தித்து ஆலோசித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், உள்ள குண்டூஸ் என்ற நகரத்தில் நேற்று முன்தினம் ஒரு மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50 மக்கள் பரிதாபமாக பலியாகினர். நூற்றுக்கும் அதிகமான மக்களுக்கு காயம் ஏற்பட்டது.

இத்தாக்குதலுக்கு பின்பு தான், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு இறுதிச்சடங்குகளும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us