கிரிக்கெட் விளையாடும் இலங்கை ஜனாதிபதி.. இணையத்தளத்தில் வைரலான புகைப்படங்கள்..!!

 

இலங்கையின், இராணுவம் 72-ஆம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி, அநுராதபுரம் கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் நாட்டின் ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சே பங்கேற்றார். அப்போது, கிரிக்கெட் மைதானத்தை அவர் திறந்து வைத்தார்.

அதன்பின்பு, அந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். அப்போது, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான, திஸாரா பெரேரா வீசிய பந்தை ஜனாதிபதி புன்னகையுடன் எதிர்கொண்டார். தற்போது அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us