விளம்பரம் தேடிக்கொள்ளவே இதை செய்தேன்..! பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்த ஆஸ்திரேலியர்… நீதிமன்றம் வழங்கிய தண்டனை..!!

 

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியை சேர்ந்த நவ்ரோஸ் அமின் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நவ்ரோஸ் அமினிடமிருந்து பயங்கரவாதம் தொடர்பான தரவுகளும், ஐ.எஸ் ஆதரவு மாத இதழ்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் நவ்ரோஸ் அமின் பயங்கரவாதத் தாக்குதலை முன்னெடுப்பதற்காக வங்காளதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றதும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற விசாரணையில் நவ்ரோஸ் அமீன் வெடிகுண்டு தயாரிப்பு தொடர்பில் கற்றுக்கொள்ள முயற்சித்தவும், வங்காளதேச நபர்கள் சிலருடன் குறியீடு வார்த்தைகளில் பேசிக் கொண்டதும் அம்பலமாகியுள்ளது. மேலும் நீதிமன்றம் நவ்ரோஸ் அமின் வங்காள தேசத்திலும், ஆஸ்திரேலியாவிலும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் நவ்ரோஸ் அமின் குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்ததோடு இது போன்ற செயல்களை விளம்பரம் தேடிக்கொள்ளவே செய்தேன் என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Contact Us