கிளர்ச்சியாளர்களின் சதிச்செயலா….? குண்டுவெடிப்பு தாக்குதல்…. 6 பேர் பலியான சோகம்….!!

 

சிரியாவின் வடக்கிலுள்ள துருக்கி எல்லையில் அலிப்போ மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் சில பகுதிகளை துருக்கி அரசு கைப்பற்றியுள்ளது. மேலும் அங்கு குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்கள் துருக்கி பயங்கரவாத அமைப்பினர் என்று கருதப்படுகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் மீது துருக்கி அரசு படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர். அதற்கு கிளர்ச்சியாளர்களும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் துருக்கியின் கட்டுப்பாட்டிலுள்ள சிரியாவின் அலிப்போ மாகாணத்தின் அஃப்ரின் மாவட்டத்தில் இன்று குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் தான் நடத்தியுள்ளனர் என்று துருக்கி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

Contact Us