தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கம்: சீமான், தேமுதிகவை பின் தள்ளியது விஜய் கட்சி…

9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர், தேமுதிக போன்ற கட்சிகளை விட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர், என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் 77 இடங்களில் முன் நிலை வகிப்பது பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. நடிகர் விஜயின் அப்பா சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சியை பதிவு செய்தார். ஆனால் உடனே ரியாக் செய்த விஜய், அதற்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, அப்பாவுக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று பெரும் புரளியைக் கிளப்பினார். ஆனால் இன்று, ஊரக உள்ளாட்சி தேர்தலில், பல இடங்களில் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டுள்ளார்கள். இதனை அறிந்தும் அவர் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார். ஆனால் முடிவுகள் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. ஏன் எனில் 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முதன்மை நிலை வகிக்கிறார்கள். வெற்றி பெறும் நிலையில் உள்ளார்கள்..

1381 ஒன்றிய கவுன்சிலருக்கான இடங்களில் 971 இடங்களில் திமுகவும், 195 இடங்களிலும் அதிமுகவும், 5 இடங்களிலும் அமமுகவும், 35 இடங்களில் பாமாவும் முன்னிலை வகிக்கிறது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் போட்டியிட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பதால் இவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். விஜய் மக்கள் இயக்க கொடியை வைத்தும், விஜயின் புகைப்படத்தை வைத்தும் பிரச்சாரம் செய்ய விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர்களுக்கு அனுமதி அளித்து இருந்தது. மொத்தம் 169 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அதாவது மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் , ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல்களில் இவர்கள் போட்டியிட்டனர்.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமாக 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். சுயேச்சையாக போட்டியிட்டு பஞ்சாயத்து கவுன்சிலர் பதவி உட்பட 77 இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் இதன் மூலம் விஜய் மக்கள் இயக்கம் புதிய சாதனை படைத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். இப்படியே விட்டால், அடுத்த பொதுத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம், நிச்சயம் போட்டியிடும் என்று எதிர்பார்கலாம் போல இருக்கே ? இது ஒரு புது டுவிஸ்டாக இருக்கு.

Contact Us