ஸ்காட்லான் வரும் கோட்டபாயவை எதிர்க்க- பஸ், கார்களில் புறப்பட தயாராகும் தமிழர்கள்: ஜேர்மன் பிரான்ஸ் சுவிஸ் இணையுமா ?

நவம்பர் மாதம் 1ம் திகதி, பிரித்தானியவில் உள்ள ஸ்காட் லாந்தில், கால நிலை மாற்ற உச்சி மாநாடு நடக்க உள்ளது. இதில் 114 உலக தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில். 114 உலக தலைவர்கள் முன் நிலையில் வைத்து, போர் குற்றவாளி கோட்டபாயவுக்கு பாடம் ஒன்றை புகட்ட தமிழர்கள் தயாராகி வருகிறார்கள். லண்டனிலும் ஏனைய இடங்களில் இருந்தும், ஸ்காட் லாந்து நோக்கி, பேருந்துகள் செல்ல உள்ளது. மேலும் பல தமிழர்கள் கார்களில் புறப்பட்டுச் சென்று. கடந்த 600 வருடங்களாக விடுதலைக்காக போராடும், ஸ்காட் லாந்து மண்ணில், பெரும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளார்கள். இதில் பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ், போன்ற அனைத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் மானமுள்ள தமிழர்கள் புறப்பட்டு வரவேண்டும். நாம் காட்டும் எதிர்ப்பில், 114 நாட்டு தலைவர்களும் கிறுதி அடிக்க வேண்டும். மேலும்…

போர் குற்றவாளி என்ற விடையத்தை முன் நிலைப்படுத்தி, நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் கலந்து கொள்ளவேண்டும். இதுவே எமது பலமாக அமையும். ஏனைய நாட்டு தலைவர்கள் மத்தியில் கோட்டபாய தலை குனிந்து நிற்க்கவேண்டிய சூழ் நிலைக்கு தள்ளப்படவேண்டும். எனவே ஸ்காட் லாந்து நோக்கி அணி திரண்டு செல்வோம்… பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு TCC, இதற்கான ஏற்பாடுகளை செய்வதோடு. இந்த விடையத்தில் அமைப்பு வேறுபாடுகள் இன்றி, அனைத்து அமைப்புகளும் ஒன்றாக அணி திரண்டுள்ளது , ஒரு நல்ல சமிஞ்சையாக பார்கப்படுகிறது.

Contact Us