வணிக வளாகத்தில் நடந்த அசம்பாவிதம்…. தப்பிச் சென்ற குற்றவாளி…. தேடுதல் வேட்டையில் காவல்துறையினர்….!!

 

கனடாவில் உள்ள Brampton நகரில் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து Peel பகுதி காவல்துறையினர் கூறியதில் “டிக்ஸி சாலையில் நள்ளிரவு 12.54 மணியளவில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளதாக அழைப்பு மணி வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கிடந்தவரை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் அவர் சிகிச்சை அங்கு பலனின்றி உயிரிழந்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவரின் அடையாளம் குறித்து எந்தவொரு தகவல்களும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் அப்பகுதி சாலைகள் மூடப்பட்டன. குறிப்பாக துப்பாக்கிச்சூடு நடத்தியவர் சிவப்பு நிற காரில் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தப்பிச் சென்றவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Contact Us