ஒரு கவுன்சிலர் சீட்டு கூட கிடைக்கவில்லை கமலின் மக்கள் நீதி மையத்திற்கு- படு தோல்வி !

இந்தத் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் 110க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதேநேரம் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்கின. இருப்பினும், 2 கட்சிகளாலும் இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் கூட வெல்ல முடியவில்லை. இது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களைப் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்கள் பணி இன்னும் வேகமாக தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

Contact Us